Wednesday, 24 July 2013

வெற்றி அல்லது வீரச் சாவு! சாகும் வரை உண்ணாவிரதம் – தமிழ்த் தேசிய விடுதலை இயக்கப் பொதுச் செயலாளர் தோழர் தியாகு

வெற்றி அல்லது வீரச் சாவு! 





கொமன்வெல்த் அமைப்பில் இருந்து சிங்கள அரசை நீக்க, இந்திய அரசு முதலில் வலியுறுத்த வேண்டும்.

இரண்டாவதாக, கொமன்வெல்த் நாடுகளின் மாநாட்டை கொழும்பில் நடத்த அனுமதிக்கக் கூடாது. மூன்றாவதாக, அப்படியே கொழும்பில் நடந்தாலும், இந்திய அரசோ மற்ற கொமன்வெல்த் உறுப்பு நாடுகளோ அதில் கலந்துகொள்ளக் கூடாது.

இந்தியாவில் எந்தப் பகுதியிலும் இலங்கை ஆயுதப் படையினருக்கோ, மற்ற துறையினருக்கோ எவ்வகைப் பயிற்சியும் அளிக்கக் கூடாது.

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கடல் வழிக் கம்பி வடம் அமைத்து மின்சாரம் கொடுப்பதற்கு செய்யப்பட்டு இருக்கும் ஒப்பந்தத்தை ரத்துசெய்ய வேண்டும்.

கச்சதீவு தொடர்பான ஒப்பந்தத்தையும் ரத்துசெய்ய வேண்டும். தமிழக சட்டப் பேரவையில் முதல்வர் ஜெயலலிதா நிறைவேற்றிய உலகத் தமிழர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தும் தீர்மானங்களுக்கு மத்திய அரசும் செயல்வடிவம் கொடுக்க வேண்டும்.

இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் சார்பில் ‘வெற்றி அல்லது வீரச்சாவு’ என்ற உறுதிப்பாட்டுடன் திலீபன் நினைவு நாள் அன்று வருகிற செப்டம்பர் மாதம் 26-ம் தேதி முதல் சாகும் வரைப் பட்டினிப் போராட்டம் தொடங்க இருக்கிறேன்.

- தியாகு



இவரின் உண்ணாவிரதம் வெற்றியடைய  உணர்வு உள்ள தமிழர்கள் அனைவரும் அவருக்கு ஆதரவு தர வேண்டுகிறோம்...

நன்றி

மேலும் அறிந்து கொள்ள :http://tamilthesam.org/