Tuesday, 23 July 2013

தமிழர்களின் மரண ஜூலை-BLACK JULY Genocide '83

 
The matters presented here in Genocide'83 constitute, at the lowest, prima facie evidence, sufficient to warrant an indictment for genocide against the Sri Lanka authorities for the crimes committed against the Tamil people in July and August 1983. Paul Sieghart in his Report of a Mission to Sri Lanka on behalf of the International Commission of Jurists and its British Section, Justice, March 1984, concluded: "Clearly this was not a spontaneous upsurge of communal hatred among the Sinhala people.. It was a series of deliberate acts, executed in accordance with a concerted plan, conceived and organised well in advance. But who were the planners?... Communal riots in which Tamils are killed, maimed, robbed and rendered homeless are no longer isolated episodes; they are beginning to become a pernicious habit."
 
 
 
25 ஜூலை 1983 அன்று மதியம் 1:30 மணிக்கு கொழும்பு மஹரகமாவில் இருக்கும் என் வீட்டுக்கு வெளியே சத்தம் கேட்டு ஜன்னலை திறந்தேன். சிங்கள இளைஞர்கள் இரு இளம் பெண்களின் முடியை பிடித்து இழுத்து வந்தார்கள் ஒரு அவருக்கு வயது 18 இருக்கும் ஒருவருக்கு வயது 11 இருக்கும். இருவரும் கதறினார்கள். அடுத்து என்ன நடக்கப்போகிறது என்று யோசிக்கும் முன்னரே அந்த சின்ன பெண்ணை துண்டம் துண்டமாக வெட்டினார்கள். நான் இயேசுவை விடாது பிராத்தித்துகொண்டே இருந்தேன். அடுத்து பெரிய பெண்ணை நோக்கி திரும்பினார்கள். அவள் ஆடைகளை கிழித்தெறிந்தார்கள். அந்த பெண் எதுவுமே செய்ய திராணியற்று நின்றுகொண்டிருந்தாள். எவ்வித எதிர்ப்பும் அப்பெண்ணிடம் இருந்து நான் அச்சூழலின் காரணமாக எதிர்பார்க்கவும் இல்லை. நட்டநடு ரோட்டில் துணியின்றி நின்றவளை வெறி கொண்டு தாக்கி கீழே தள்ளி ஒருவர் பின் ஒருவராக கற்பழித்தார்கள். எதுவுமே செய்ய முடியாத கையாலாகதவனாய் கடவுளை மட்டும் வேண்டிக்கொண்டிருந்தேன். என்னால் இதை எல்லாம் தொடச்சியாக பார்க்க முடியவில்லை. சிறிது நேரத்தில் அந்த பெண் கதறுவது நின்றது. அவள் சுயநினைவை இழந்துவிட்டாள் என்பது தெரிந்தது. மீண்டும் வெளியே பார்த்தேன். அப்பெண்ணின் மீது பெட்ரோலை ஊற்றிக்கொண்டு இருந்தார்கள் கடவுளே என்று கண்ணை மூடிக்கொண்டேன். சிறிது நேரத்தில் உயிரோடு இருந்த அந்த பெண் எரிந்து கொண்டு இருந்தாள். அன்று மட்டும் உயிரோடு மனிதர்கள் கொளுத்தப்படுவதை இரண்டாவது முறையாக பார்க்கிறேன். ஏதோ கற்காலத்தில் இருப்பதை போல எண்ணினேன். அடித்து சொல்கிறேன் சிங்கள பௌத்தர்கள் எல்லாம் கற்காலத்தில் இருந்தவர்களை விட மோசமானவர்கள். - Diary of events recorded by an inmate - Appendix A in Thornton, E.M. & Niththyananthan, R. Sri Lanka, Island of Terror - An Indictment, Eelam Research Organisation, (ISBN 0 9510073 0 0), 1984

# மேல நடந்ததை போல் தனக்கும் தன் பிள்ளைகளுக்குக் நடந்துவிடக்கூடாது என்று எம்மினம் உயிரை காப்பாற்றிக்கொள்ள ஏதிலியாகவும் அகதியாகவும் வாழ்ந்த மண்ணை விட்டு உலகெங்கும் ஓடி சென்று கையேந்தி நின்ற நாள்.. ஜூலை 23...

மறக்கமாட்டோம் மன்னிக்கவே மாட்டோம்...
 
பாக்கியராசனபாக்கியராசன் சே