Tuesday, 23 July 2013

சோமாலியா - உணவு இல்லாமல் தொடரும் பட்டினி மரணங்கள்,வேடிக்கை பார்க்கும் உலகம்


சோமாலிய நாட்டில் மிகவும் கொடுமையான  பட்டினி நிலவுவதாக தகவல் வருகிறது....

ஒரு நாடே உணவு இல்லாமல் செத்து கொண்டு இருக்கிறது......

ஒருவனுக்கு உணவு இல்லை எனில் இந்த ஜகத்தை அழித்திடுவோம் நு பாரதி சொன்னார்......

ஆனால் ஈழத்திலும் பலர் உணவு இல்லாமல் கஷ்ட படுறாங்க......

சோமாலிய நாடு அதை விட கோரமாக வறுமை தாண்டவம் ஆடுகிறது.....

இவற்றிற்கு உலக மக்கள் ஆகிய  நாமும் வேடிக்கை பார்க்கிறோம்.....

பன்னாட்டு சபையும் (U.N.O) வும் ஒன்றும் பெரிதாக நடவடிக்கை எடுத்த மாதிரி தெரியல.......

நாம் அனைவரும் ஒன்றிணைந்து  நாம்மால் முடிந்த  உதவி செய்தால்....போராடினால்...மற்றவர்களிடமும்  உதவி கோரினால்....

அவர்களின் அடிப்படை தேவையான உணவு பிரச்சனையை தீர்க்க முடியும்......


அனைத்து நாடுகளும் சேர்ந்து பன்னாட்டு சபை மூலம்..அந்நாட்டில்...பட்டினியால் வாடும் ஒவ்வொருவருக்கும் இலவச அரசி மற்றும் சமையல் செய்ய தேவையான பொருட்களை இலவசமாக கொடுத்தால் என்ன.....


இது போன்ற ஒருவேளை உணவு இல்லாமல்  கொடிய வறுமையில் உள்ளவர்களுக்கு.......உணவு கிடைக்க ...

மக்கள் ,அரசியல் வாதிகள்,அரசாங்கம்...தொண்டு நிறுவனங்கள்....ஏன் இன்னும் பெரும் அளவில் முயற்சி எடுக்கவில்லை........


நம் மனம் ஏன்  இரக்கம் இல்லாமல் போய்கொண்டு உள்ளது........


ஒன்று நாம் அவர்களுக்கு உணவு கிடைக்க ஏற்பாடு செய்யவேண்டும்...

இல்லையெனில் அவர்களை ஓட்டு மொத்தமாக கொன்று விடுவோம்...கருணை கொலை போல்...

அவர்கள் நிம்மதியாக சாக ஆவது செய்வோம்.....

உணவு இல்லாமல் உயிர் துடித்து சாவதை விட இது மேல்....என்று தோன்றுகிறது..........

அவர்களை சாக அடிக்கவேண்டும் என்பது என் எண்ணம் இல்லை...

மற்றவர்களுக்கு நடப்பதை வேடிக்கை பார்க்கும் மனிதர்களில்.......

நானும் உங்களில் ஒருவன் என்று வருத்தமாக சொல்கிறேன்......


வேடிக்கை பார்பதை விட முடிந்த செயலை செய்வோம்......

அது நம் கடமை..........இதை அனைவரிடமும் கொண்டு செல்லுங்கள்......

மற்றும் இப்பிரச்சனைக்கு உங்களால் முடியும் செயலை செயல்படுத்துங்கள்.......

மனம் மாறுவோம் ...மாற்றம் ஏற்படுத்துவோம்..........

நன்றி