நாம்
மாற வேண்டும்....ஒரு உயிர் துடிக்க மக்கள் வேடிக்கை பார்ப்பது மிகவும்
கொடுமை.....நாளை நமக்கும் இதே நிலைமை தான்....மனம் மாறுங்கள் மக்களே
எபோழுதம் வேடிக்கையே பார்த்து கொண்டு இல்லாமல்.முடிந்தவரை
செயல்படுங்கள்.....அது தான் மனிதன் என்பதன் அர்த்தம்......:(((
கேடுகெட்ட
நிர்வாகமும்..உதவாக்கரை போலிசும்...எனகென்ன என்று இருக்கும்
மக்களும்....உதவுபவர்களுக்கு ஆதரவு தெரிவித்தல் அந்த உயிர் காப்பாற்ற பட்டு
இருக்கும்
அவென்யு மாலில் மேலே இருந்து கீழே விழுந்து துடிக்கிறான் ஒரு இளைஞன், மக்கள் சுற்றி நின்று அதை வேடிக்கை பார்க்கிறார்கள். ஒரு சில இளைஞர்கள் மட்டும் அவனை தூக்கி காப்பாற்ற முயல்வதை அந்த நிர்வாகமும், அங்கே இருக்கும் பவுன்சர்களும் தடுக்கிறார்கள். போலீசும் ஆம்புலன்சும் வந்துதான் மேற்கொண்டு எதையும் செய்ய வேண்டும் என்கிறார்கள். கிட்டத்தட்ட இருபது நிமிடங்கள் அந்த உடல் அங்கே இரத்த கசிவுடன் கிடக்கிறது. பின்னர் ஒரு வழியாக மருத்துவமனைக்கு எடுத்து செல்கிறார்கள். இடைப்பட்ட நேரத்தில் அங்கே நின்ற ஒரு சில இளைஞர்கள் நிர்வாகத்திடம் அலட்சியப்படுத்தியதற்காக வாக்குவாதத்தில் இறங்குகிறார்கள். நிர்வாகம் இளைஞன் நலமாக இருக்கிறான் களைந்து செல்லுங்கள் என்று அறிவிக்கிறது!
அங்கே ஒரு பெண் வருகிறார், நான் மருத்துவமனையில் இருந்து வருகிறேன், மருத்துவர் அதிக ரத்தம் வெளியேறியதால் இறந்துவிட்டாதாக அறிவித்துவிட்டார் என்கிறார். தான் மாடியில் இருந்து அனைத்தையும் கவனித்து, இறங்கி வந்தும் இருபது நிமிடங்கள்வரை அவரை இங்கேயிருந்து நகர்த்த அனுமதிக்கவில்லை என்று சொல்லி நிர்வாகத்திடம் பெரும் வாக்குவாதத்திலும் இறங்குகிறார் அந்தப்பெண். இவ்வளவு தைரியமான பெண்ணை சாமான்ய உலகில் பார்த்தது இல்லை. நிர்வாக ஏற்ப்பாட்டில் அங்கே காவல் துறை வருகிறது, தன்னந்தனியாக போராடும் அந்த பெண்ணிடம் ஒரு 'காவல்துறை அதிகாரி' சொல்கிறான் ''ஓடிப்போயிரு உதைப்பேன்'' என்று.
அந்த பெண்ணை பார்த்தால் ஏழை எளியவர் வீட்டு பெண் போல தெரியவில்லை, வசதியான வீட்டு பெண்ணாகத்தான் தெரிகிறார். அவரிடமே காவல்துறை காட்டுக்கூச்சல் இடுகிறது. அந்த இடத்தில் ஏழை எளியவர்களை என்ன செய்து இருப்பார்கள்? அவன் மாடியில் இருந்து விழுந்தது முதல் அந்தப்பெண் தன்னந்தனியாக போராடுவது வரை அத்தனை காட்சிகளையும் இப்போதும் மாடிகளில் நின்றவாறு தொடர்ந்து வேடிக்கை மட்டுமே பார்க்கிறது பெரும்பான்மை சமூகம். சமீபத்திய நிகழ்வுகளை பார்க்கும்போது தமிழ்நாட்டு தமிழர்களை அழிக்க எவனாவது ஒரு ராஜ பக்சே பிறக்க மாட்டானா, கூடங்குளமும் கல்பாக்கமும் ஒருசேர வெடித்து சிதறாதா என்றெல்லாம் ஏங்குகிறது மனம்!!! (கீழே இணைக்கப்பட்டு இருக்கும் காணொளியை அவசியம் பாருங்கள், நாம் வாழும் சமுகம் எது என்று உங்களுக்கு புரிய வேண்டும்)