Saturday 12 October 2013

இனப்படுகொலை நாட்டில் காமன்வெல்த் மாநாடா ???




1796’ல் பிரித்தானிய அரசின் சார்பில் இலங்கைக்கு வந்து, இலங்கையின் நிலைமைகளை துல்லியமாக ஆய்வு செய்து, பிரிதானிய அரசுக்கு அறிக்கையளித்த ‘கிலைக்கோன்’ என்ற சிவில் அதிகாரி வடக்கு கிழக்கு பிரதேசம் பற்றியும் அங்கு தமிழர்கள் தாம் ஆட்சி புரிந்து வாழ்ந்து வருகின்றனர் என்பது பற்றியும் மிக தெளிவாக குறிப்பிட்டு இருக்கிறார்.
இலங்கையில் இரண்டு இறைமை உள்ள நாடுகள் உண்டு என்பது வரலாற்று காலத்தில் இருந்தே அறிய பட்ட உண்மை ,

ஆனால் பிரித்தானிய ஏகாதிபத்திய அரசினால் அவர்களின் நிர்வாக வசதியின் பொருட்டு இலங்கை ஒரே நாடு என 1833ம் ஆண்டில் அறிமுகபடுத்தபட்டது. இதன் மூலம் தமிழினத்தின் சுயாதீனமும் தனிப்பிரதேசமும் ஐக்கிய இலங்கை என்ற ஒரே அமைப்பின் கீழ் பறிக்கப்பட்டத் துரோக வரலாறு ஆங்கிலேயர்களால் நிகழ்த்தப்பட்டது.

1948’ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இலங்கைக்கு டொமினியன் அந்தஸ்த்து (சுதந்திரம்) ஆங்கிலேயர்களால் வழங்கப்பட்டது.

தனியாட்சி நடத்திய பூர்வக்குடி மக்களான தமிழர்களின் ஈழ தாயகமான வடக்கு கிழக்கு பகுதியை பிடித்த ஆங்கிலேயர்கள் 1948’ல் தமிழர்களிடமே திருப்பி கொடுத்திருக்க வேண்டும். அதற்கு மாறாக தவறான புள்ளிவிவரங்களின் அடிப்படையிலும் தெளிவற்ற அரசியல் சித்தாந்தங்களின் அடிப்படையிலும் கொலைகார சிங்களவர்களிடம் இலங்கை முழுவதையும் ஒப்படைத்துவிட்டார்கள்.

ஈழ தமிழர்கள் தங்களுக்கே உரிய வாழ்கை முறை, பண்பாடு, கலாச்சாரம் ஆகியவற்றைக்கொண்ட தனிப்பட்ட ஒரு சிறுபான்மை நாட்டு இனம் (Minority Nation) என்பதை மறைத்து அவர்கள் இலங்கை சிறுபான்மையினர் என்று கூறி,
பிரச்னையை திசை திருப்பிய காரணத்தினால் ஈழ தமிழர்கள் பிரச்சனை உள்நாட்டு பிரச்சனை என்றும் மற்ற நாட்டின் கவனத்திற்கோ அல்லது உலக மன்றத்தின் கவனத்திற்கோ உட்படாத பிரச்சனை என்றும் ஒரு தவறான கற்பனை கருத்து உருவாக்க பட்டிருக்கிறது.

இதை மற்ற நாடுகள் அவர் அவர் சுயநலம் கருதி கண்டுகொள்ளாமல் இருக்கலாம், ஆனால் பிரிதானிய அரசு அன்றைக்கு செய்த தவறை உணர்ந்து ஈழ தமிழர்களிடம் இருந்து பறித்த நாட்டை தமிழர்களிடமே ஒப்படைவு செய்ய பட துணை நிற்க வேண்டும்.
செய்த பாவத்திற்கு பிராயச்சித்தம் தேடுவதற்கு பதிலாக “குதிரை கீழே தள்ளியது மட்டும் இல்லாமல் குழியை பறித்தது போல” இனப்படுகொலை செய்த நாட்டில் காமன் வெல்த் மாநாடு நடத்துவது தமிழர்களை மேலும் அழிவிற்கே கொண்டு செல்லும்.
ஆகவே, தான் செய்த வரலாற்று தவறை நேர் செய்யும் விதமாக காமன் வெல்த் அமைப்பில் இருந்து இலங்கையை நீக்க பிரிட்டன் துணை நிற்க வேண்டும். இதற்கு தமிழர்களாகிய நாம் இந்தியாவிற்கும் , பிரிதானிய அரசிற்கும் அழுத்தம் கொடுக்கும் விதமாக செயல் பட வேண்டும்..
 
-Prabhakaran V Prabha PK  https://www.facebook.com/prabha.pk.96