Tuesday 13 August 2013

இனி ஆகிலும் தன்னிலை உணர்ந்து சுதாரித்து கொள்ளுமா இந்தியா?



இந்திய (தமிழ்) மீனவனை நடுகடலில் சுட்டுகொல்லப்படும் இலங்கை கடற்படையை இந்தியா தட்டி கேட்காத வரை,கடும் நடவடிக்கை எடுக்காத வரை .நான் இந்தியனா என்று என் மனம் தொடர்ந்து கேள்வி எழுப்புகிறது ,ஒரு சிறு நாடு  தொடர்ந்து ஒரு பெரிய நாட்டின் குடிமக்களை  எளிமையான காரணங்களுக்காக சுட்டு கொல்ல ,பயங்கர ஆயுதங்களால் தாக்க முடிகிறது என்றால்...அந்நாட்டின் குடிமகனுக்கு என்ன பாதுகாப்பு இருக்கிறது....அவன் எப்படி தன்நாட்டை பற்றி பெருமை கொள்ளமுடியும்....எல்லையில் ஒரு ராணுவ வீரன் கொல்லபட்டால்.....அன்று பாராளமன்றம் முடங்குகிறது...ஊடகங்கள் அன்று முழுவதும் செய்தி வெளியிடுகிறது...அரசியல் கட்சிகள் கொந்தளிக்கின்றன....அது வரவேற்க தகுந்தது.....ஒரு நாட்டையும் அன் நாட்டின் குடிமக்களையும் காப்பாற்றுவதுதான் முப்படைகளின் கடமை...அப்பொழுது  ஒரு குடிமகன் பிற நாட்டு ராணுவத்தால் கொல்ல பட்டால் ,நாடு எந்த அளவு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்,எதிர் கட்சிகள் எந்த அளவு கொந்தளிக்க வேண்டும்.....பல லட்ச கணக்கான கோடி பாதுகாப்பு க்கு பட்ஜெட் இல் நிதி ஒதுக்கும் போது....குடிமக்களின் உயிரை தொடர்ந்து பிற நாட்டு இராணுவத்திடம் இருந்து காப்பாற்ற முடியவில்லை என்றால்.....பிறகு கடற்படை என்ன செய்துகொண்டு உள்ளது....வேறு நாட்டுடன் போர் நடக்கிறதா ...கப்பற்படை தன் பணியை (குடிமக்களை அந்நியரிடம் இருந்து காப்பது) செய்யாமல் இருப்பது....அவர்கள் பணியை செய்யாமல் வேறு என்ன செய்து கொண்டு உள்ளார்கள்....தன் கடல் பிராந்தியத்தில் தன குடி மக்களின் உயிரை காப்பாற்ற முடியாத கடற்படை இருந்து என்ன பலன்....அதற்கு ஒதுக்கும் நிதிக்கு என்ன பலன்....அரசாங்கத்தின் பணம் அதிக அளவு விரயம் ஆகிறது....ஆனால் அதனால் உபயோகம் இல்லை...அப்படி என்றால்....அப்பொழுது கடற்படை வேண்டுமா....யதார்த்தத்தில் உபயோகம் இல்லாத கடற்படை இல்லாமல் இருந்தாலே அந்த நிதி வேறு உபயோகமான காரியத்திற்கு பயன்படுத்தி கொள்ளலாம்.....ஆனால் இதில் கப்பற்படை யை குற்றம் சொல்வதை விட.....அதை பனி செய்ய விடாமல் தடுக்கும்....இந்திய காங்கிரஸ் அரசுதான்....முழுமுதற் காரணம்.....அதை எதிர்த்து கேட்காத எதிர் கட்சிகளும் ,அரசியல் வாதிகளும்....அதை வெளிக்கொண்டு வராத ஊடகமும்.....குற்றவாளிகளே.... இதுவே இந்திய-தமிழன்  அல்லாத வேறு இந்திய மீனவன் கொல்லபட்டால் இதே காங்கிரெஸ் அரசும்,எதிர் கட்சியும் ஊடகமும்..கப்பற்படை மூலமும் அரசியல் ரீதியாகவும். ஊடகம் மூலம் .கடும் நடவடிக்கையும் கடும் கண்டனமும் செயல்படுத்தி இருக்கும்....அப்படி என்றால்  இந்திய-தமிழனுக்கும் ,வேறு இந்தியனுக்கும் ஒரு அரசு பாகுபாடு பார்கிறது என்றால்.....
பாதிக்கப்படும் தமிழ் குடிமகன் தன்னை எப்படி இந்தியன் என்று சொல்லி பெருமிதம் கொள்ளமுடியும...? இதை இந்திய அரசும்,எதிர் கட்சிகளும்,ஊடகமும் பரிசிலித்து  இந்த மாற்றான் தாய் மனநிலையை உணர்ந்து மாற்றி கொள்ள வேண்டிய தருணம்....இல்லை என்றால் வருங்காலங்களில்....பெரும் பாதிப்பை இந்திய துணை கண்டத்தில் ஏற்படுத்தும் என்பது உண்மை....இனி ஆகிலும் விழித்து கொள்ளுங்கள்.