Wednesday 24 July 2013

ஸ்ரீ லங்கா, LDD தமிழ் டைகர், பிரபாகரன். பேசுற மொழி தானே தமிழ் .அதைதான் நீங்களும் பேசுறிங்களா


தமிழன்( Tamilan )
நான் சென்ற வருடம் வெளிநாடு ஒன்றுக்கு சென்றிருந்தேன். அந்த நாட்டு விமான நிலையத்தில் இறங்கியதும். நாம் எந்த நாட்டில் இருந்து வருகிறோமோ அந்த நாட்டு மொழியில் நமக்கு வணக்கம் சொல்வார்கள். நான் இந்தியா என்றதால், என்னிடம் இந்தி மொழியில் வணக்கம் சொல்லி என்னை வரவேற்றார்கள். நான் அதுக்கு பதில்சொல்லவில்லை.
அதனால் அந்த நாட்டை சேர்ந்த ஒருவர் என்னிடம் கேட்டார் ஏன் நான் வணக்கம் சொன்னதுக்கு நீங்கள் பதில் சொல்லவில்லை என்று கேட்டார். நான் சொன்னேன் எல்லா மொழியிலும் வணக்கம் சொல்லுறிங்க என் மொழியில் நீங்கள் வணக்கம் சொல்லவில்லையே. அதான் பதில் சொல்லவில்லை. அவர்கள் கேட்டார்கள் நீங்கள் இந்தியன் தானே. ஆம் நான் இந்தியன் ஆனால் என் தாய் மொழி தமிழ் என்று சொன்னேன்.

அப்ப அவன் சொன்னான் அப்படி ஒரு மொழி இருப்பதாக தெரியவில்லையே. என்று சொன்னான் , என்னை கொஞ்சம் இருங்கள் என்று சொல்லி. அவன் சிறிது நேரம் யோசித்து விட்டு. அவன் கேட்டான் ,,ஆ ஆ ஸ்ரீ லங்கா, LDD தமிழ் டைகர், பிரபாகரன். பேசுற மொழி தானே தமிழ் .அதைதான் நீங்களும் பேசுறிங்களா என்று கேட்டான் .நான் ஆச்சரியத்தோடு ஆம் என்றேன் .
அவன் என்னை தனியாக ஒரு அறைக்கு அழைத்து சென்று என்னை தமிழில் வணக்கம் சொல்ல சொல்லி. என் குரலை பதிவு செய்தார்கள் . பிறகு என்னிடம் தமிழில் வணக்கம் சொன்னார்கள். அவன் சொன்னான் இனி எங்கள் நாட்டுக்கு தமிழர்கள் வந்தால் வணக்கம் சொல்லுவோம் என்றான்..

நான் வெளியே வந்து யோசித்தேன் .என்னடா தமிழ்நாட்டில் ஏழு கோடி தமிழன் இருக்கிறோம். எங்களை யாருக்கும் தெரியவில்லையே.. ஈழத்தமிழனை மட்டும் எப்படி தெரியுது இவர்களுக்கு.
அந்தமாரி நான் அந்த நாட்டில் உள்ள பலபேரை சந்திதேன். நான் தமிழன் என்று சொன்னாலே அவன் கேக்கிறான். நீங்கள் இலங்கையா? தமிழ் டைகரா? என்று. கேக்கிறார்கள். அப்பத்தான் எனக்கு புரிந்தது .நாம் இத்தனை கோடி தமிழன் இருந்து என்ன பயன். நம்மை யாருக்கும் தெரியவில்லையே எனக்கு ஒன்று மட்டும் புரிந்தது. இந்த உலகத்துக்கு தமிழனையும், தமிழ் மொழியையும், அறிமுகம் செய்தவர்கள், திரு பிரபாகரனும், ஈழ தமிழர்களும்தான் என்று புரிந்து கொண்டேன் .. பிரபாகரன் என்ற ஒரு தலைவன் மட்டும் இல்லை என்றால் இந்த உலகில் தமிழனை யாருக்கும் அடையாளம் தெரியாது என்பது உண்மை .. நன்றி .