Wednesday, 25 December 2013

தமிழ் ஈழத்திற்கு பொது வாக்கெடுப்பு நடத்த வலியுறுத்தி ஒபாமாவிற்கு ,send a petiton to obama to conduct a refrundum for tamil eelam

அனைவர்க்கும் பகிருங்கள்..pls share to all..
கீழே கொடுத்துள்ள லிங்க் கை கிளிக் செய்து...
" ITS A CRIME TO CALL GENOCIDE AS A WAR CRIME.
CONDUCT REFERUNDUM FOR INDEPENDENT THAMIL EELAM AS PER U.N RULE
"
என்று கமென்ட் இல் போட்டு அமெரிக்கா அதிபர் ஒபாமாவிற்கு அனைவரும் அனுப்பவும்...
http://www.whitehouse.gov/contact/submit-questions-and-comments
அதன் தமிழ் அர்த்தம் "இனபடுகொலையை போர்குற்றம் என்று கூறுவது குற்றம்..சுதந்திரமான தமிழ் ஈழத்திற்கு ஐ.ந சட்டத்திற்கு உட்பட்டு பொது வாக்கெடுப்பு நடத்துங்கள் என்பது....
உங்கள் தகவலை கொடுத்து அனைவரும் அனுப்புங்கள்..மற்றவர்களையும் அனுப்ப சொல்லுங்கள்..நன்றி
please send the sentenece"

ITS A CRIME TO CALL GENOCIDE AS A WAR CRIME.CONDUCT REFERUNDUM FOR INDEPENDENT THAMIL EELAM AS PER U.N RULE "

to america president obama  by clicking the below link...please share this link to everyone,,and ask everyone to send this petition to president oabma...to conduct a refrundum for thamil eelam...thanks
http://www.whitehouse.gov/contact/submit-questions-and-comments

Saturday, 12 October 2013

இனப்படுகொலை நாட்டில் காமன்வெல்த் மாநாடா ???




1796’ல் பிரித்தானிய அரசின் சார்பில் இலங்கைக்கு வந்து, இலங்கையின் நிலைமைகளை துல்லியமாக ஆய்வு செய்து, பிரிதானிய அரசுக்கு அறிக்கையளித்த ‘கிலைக்கோன்’ என்ற சிவில் அதிகாரி வடக்கு கிழக்கு பிரதேசம் பற்றியும் அங்கு தமிழர்கள் தாம் ஆட்சி புரிந்து வாழ்ந்து வருகின்றனர் என்பது பற்றியும் மிக தெளிவாக குறிப்பிட்டு இருக்கிறார்.
இலங்கையில் இரண்டு இறைமை உள்ள நாடுகள் உண்டு என்பது வரலாற்று காலத்தில் இருந்தே அறிய பட்ட உண்மை ,

ஆனால் பிரித்தானிய ஏகாதிபத்திய அரசினால் அவர்களின் நிர்வாக வசதியின் பொருட்டு இலங்கை ஒரே நாடு என 1833ம் ஆண்டில் அறிமுகபடுத்தபட்டது. இதன் மூலம் தமிழினத்தின் சுயாதீனமும் தனிப்பிரதேசமும் ஐக்கிய இலங்கை என்ற ஒரே அமைப்பின் கீழ் பறிக்கப்பட்டத் துரோக வரலாறு ஆங்கிலேயர்களால் நிகழ்த்தப்பட்டது.

1948’ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இலங்கைக்கு டொமினியன் அந்தஸ்த்து (சுதந்திரம்) ஆங்கிலேயர்களால் வழங்கப்பட்டது.

தனியாட்சி நடத்திய பூர்வக்குடி மக்களான தமிழர்களின் ஈழ தாயகமான வடக்கு கிழக்கு பகுதியை பிடித்த ஆங்கிலேயர்கள் 1948’ல் தமிழர்களிடமே திருப்பி கொடுத்திருக்க வேண்டும். அதற்கு மாறாக தவறான புள்ளிவிவரங்களின் அடிப்படையிலும் தெளிவற்ற அரசியல் சித்தாந்தங்களின் அடிப்படையிலும் கொலைகார சிங்களவர்களிடம் இலங்கை முழுவதையும் ஒப்படைத்துவிட்டார்கள்.

ஈழ தமிழர்கள் தங்களுக்கே உரிய வாழ்கை முறை, பண்பாடு, கலாச்சாரம் ஆகியவற்றைக்கொண்ட தனிப்பட்ட ஒரு சிறுபான்மை நாட்டு இனம் (Minority Nation) என்பதை மறைத்து அவர்கள் இலங்கை சிறுபான்மையினர் என்று கூறி,
பிரச்னையை திசை திருப்பிய காரணத்தினால் ஈழ தமிழர்கள் பிரச்சனை உள்நாட்டு பிரச்சனை என்றும் மற்ற நாட்டின் கவனத்திற்கோ அல்லது உலக மன்றத்தின் கவனத்திற்கோ உட்படாத பிரச்சனை என்றும் ஒரு தவறான கற்பனை கருத்து உருவாக்க பட்டிருக்கிறது.

இதை மற்ற நாடுகள் அவர் அவர் சுயநலம் கருதி கண்டுகொள்ளாமல் இருக்கலாம், ஆனால் பிரிதானிய அரசு அன்றைக்கு செய்த தவறை உணர்ந்து ஈழ தமிழர்களிடம் இருந்து பறித்த நாட்டை தமிழர்களிடமே ஒப்படைவு செய்ய பட துணை நிற்க வேண்டும்.
செய்த பாவத்திற்கு பிராயச்சித்தம் தேடுவதற்கு பதிலாக “குதிரை கீழே தள்ளியது மட்டும் இல்லாமல் குழியை பறித்தது போல” இனப்படுகொலை செய்த நாட்டில் காமன் வெல்த் மாநாடு நடத்துவது தமிழர்களை மேலும் அழிவிற்கே கொண்டு செல்லும்.
ஆகவே, தான் செய்த வரலாற்று தவறை நேர் செய்யும் விதமாக காமன் வெல்த் அமைப்பில் இருந்து இலங்கையை நீக்க பிரிட்டன் துணை நிற்க வேண்டும். இதற்கு தமிழர்களாகிய நாம் இந்தியாவிற்கும் , பிரிதானிய அரசிற்கும் அழுத்தம் கொடுக்கும் விதமாக செயல் பட வேண்டும்..
 
-Prabhakaran V Prabha PK  https://www.facebook.com/prabha.pk.96

ஒன்றாக வேண்டும் நாம் வென்றாக வேண்டும் தமிழ்

இங்கு இணையத்தில் ஆதரவு தெரிவிக்கும் சென்னையில் உள்ள உணர்வாளர்களே பலர் இங்கு நடக்கும் போராட்டங்களில் கலந்து கொள்வது இல்லை..

தயவுசெய்து உணர்வாளர்கள் போராட்டங்களை பல்வேறு வடிவங்களில் முன்னெடுங்கள்...உங்கள் பகுதிகளில் நடக்கும் போரட்டங்களில் கலந்து கொள்ளுங்கள்..

இனி போராட்டங்களில் கலந்து கொள்வதற்கான காரணங்களை கண்டெடுங்கள்..

உணர்வு உள்ள நாமே பங்கெடுக்க வில்லை என்றால் பிறகு மக்களிடம் எப்படி உணர்வை மேலோங்க செய்ய போகிறோம்...

சாதி,மத,கட்சி பேதமின்றி யார் இனத்திற்கு ஆதரவாக போராடினாலும்...அவர்களின் கடந்த கால செயல்களினால் விமர்சனங்களை வைக்காமல்...அங்கு சென்று ஆதரவு தெரிவியுங்கள்....

துரோகியாக இருந்தாலும் எதிரியாக இருந்தாலும் இனத்திற்கு ஆதரவான போரட்டங்களை செய்தால்....அவர்கள் இனத்திற்கு ஆதரவாக தொடர்ந்து நடிப்பதற்கு ஆவது ஆதரவு கொடுங்கள்...அவர்கள் இனத்திற்கு ஆதரவாக தொடர்ந்து நடிக்க வேண்டிய நிர்பந்தத்தை உருவாக்குங்கள்.....ஆனால் தேர்தலில் அவர்களுக்கு உங்கள் வாக்குகளை போடாதீர்கள்...இனத்திற்கு ஆதரவானவர்களுக்கு மட்டும் உங்கள் வாக்குகளை போடுங்கள்....

நீங்கள் எந்த கட்சி,அமைப்பில் இருந்தாலும் இனத்திற்கு வேறு கட்சி ,அமைப்பில் உள்ளவர்கள் ஆதரவாக போராட்டம் நடத்தினால்....உங்கள் கட்சி அமைப்புகளை மறந்து தமிழனாக அவர்களுக்கு ஆதரவு கொடுங்கள்..ஊக்கபடுத்துங்கள்......

இனத்தின் தோல்வி என் தோல்வி
இனத்தின் வெற்றி என் வெற்றி
என்பதை உணருங்கள்..

ஒன்றுபடுவோம் வென்றெடுப்போம்...
தமிழன் என்று சொல்லடா
தரணியில் தலைநிமிர்ந்து நில்லடா
என்ற வாசகத்தை மெய்பிப்போம் வாருங்கள்
என் இன தோழமைகளே

மேலும் அறிந்து கொள்ள :https://www.facebook.com/GTOChennai



Wednesday, 21 August 2013

மெட்ராஸ் கபே படத்தை தடை செய்ய வேண்டி censor boaard க்கு petition புகார் அனுப்புங்கள்

இதில் தொடர்பு கொண்டு censor board க்கு petition இதில் கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சலுக்கு (email) அனுப்புங்க மெட்ராஸ் கபே படத்திற்கு எப்படி அனுமதி கொடுத்தீங்கனு....சிங்களம் செய்த இனபடுகொலையை ஏன் எடுக்கவில்லை....தமிழ் போராளிகளை எதற்கு தீவிரவாதிகளாக சித்தரித்து உள்ளார்கள் என்று......இந்த படம் மூலம் தமிழர்கள் அழிக்க பட வேண்டியவர்கள் நு சொல்ல வரீங்களா ....அந்த படத்திற்கு அனுமதி கொடுத்து.....அப்படின்னு உங்க கருத்தை email பண்ணுங்க....

அதில் உள்ள தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொண்டு உங்க கருத்தை பதிவு செய்யுங்க.... இதை அனைவர்க்கும் பகிருங்கள்.இன்று ஒரே நாள் தான் உள்ளது படம் நாளை (23-08-2013) ஆகஸ்ட் 23 வெள்ளிகிழமை  வெளியிட உள்ளார்கள்..அதனால்..உடனே புகார் தெரிவியுங்கள்


 குறிப்பு :மின்னஞ்சல் email subject ல BAN MADRAS CAFE நு போடுங்க

Smt. Leela Samson
Central Board of Film Certification
Bharat Bhavan
91-E Walkeshwar Road,
Mumbai 400 006
Tel No. 2363 1048
Fax No: 2369 0083
Email : chairperson.cbfc@nic.in

Smt. Pankaja Thakur
Chief Executive Officer
Central Board of Film Certification
Bharat Bhavan
91-E Walkeshwar Road,
Mumbai 400 006
Tel No. 2363 1048
Fax No: 2369 0083
Email : ceo.cbfc@nic.in

Shri V.Packirisamy,
Regional Officer,
CBFC, Chennai
Tel: 044-28278764
E-Mail :
rochen.cbfc@nic.in

Monday, 19 August 2013

இனம் முக்கியமா ?கட்சி முக்கியமா ?

தமிழர்களே உங்கள் கட்சியை விட உங்கள் இனத்திற்கு முன்னுரிமை கொடுங்கள்....இனத்திற்காக கட்சியை இழக்கலாம் ஆனால் கட்சிக்காக இனத்தை இழக்க கூடாது..இங்கு மாறி நடக்கிறது தயவுசெய்து இனி மாறிவிடுங்கள்...எதற்கு முதலில் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று சிந்தித்து உணருங்கள்.....நீங்கள் ஒரு கட்சியில் இருந்தாலும் கட்சியை விட்டு வரமுடியவில்லை என்றாலும் தயுவுசெய்து இனத்திற்கு ஆதரவான கட்சிக்கு வாக்களியுங்கள் இனி வரும் தேர்தலில்....தமிழர்களே கட்சியை விட இனம் தான் முக்கியம் என்பதை உணருங்கள்.......
 
 
தமிழ்நாட்டில் இனத்தின் எதிரிகளுக்கு ஆதரவு தரும் சில கட்சிகளில் உள்ள சில தமிழர்களே உங்களுக்கு இனத்தை விட கட்சி தான் முக்கியமா...
ஏன் இனத்தின் எதிரிகளுக்கு ஆதரவு தருகிறீர்கள்....இனத்தின் எதிரிகளுக்கு ஆதரவளிப்பது குற்றஉணர்வு தோன்றவில்லையா...தமிழின போராட்டத்தை வேறு வடிவத்திற்கு கொண்ட சென்ற தமிழர்களுகாக தங்கள் உயிரை துறந்த விடுதலைபுலிகளை ...உங்கள் கட்சிக்காக எதிர் பிரச்சாரம் செய்கிறீர்களே.....இனத்தை விட உங்கள் கட்சி தான் முக்கியமா...இனம் அழிந்தாலும் பரவா இல்லை ஆனால் உங்கள் கட்சி தான் முக்கியமா உங்களுக்கு....சிந்தித்து பாருங்கள்....தமிழீழ போரட்டத்திற்கு ஆதரவு கொடுங்கள்....உங்களுக்கு வரும் நன்மையை நீங்களே எதிர்ப்பது உங்களுக்கு நன்மையா.....தயவுசெய்து கட்சியில் உள்ள அனைவரும் உங்களுக்கு கிடைக்கும் சிறு ஆதாயத்திற்காக உங்கள் கட்சியை இனத்திற்கு எதிராக செயல்பட்டாலும் ஆதரிக்காதீர்கள்..இனத்திற்கு முதல் முக்கியத்துவம் கொடுங்கள்...இனத்திற்கு பிறகுதான் கட்சி....இது நான் எல்லா கட்சியில் உள்ளவர்களுக்கும் சொல்கிறேன்.....

உனக்கு என்று ஒரு நாடு அதை ஆட்சி செய்யும் உரிமையும் உனக்கு மட்டுமே..அது வேண்டாமா....உனக்கு???



தமிழனுக்கென்று தனி தமிழீழ நாடு ..
அந்நாட்டை ஆட்சி செய்யும் வாய்ப்பு உனக்கும் உண்டு தமிழா..
தமிழ்நாட்டில் தமிழன் ஆட்சி செய்யமுடியாத சூழ்நிலையில்....
தமிழன் மட்டுமே ஆள முடியும் உன் ஈழ நாட்டில் என்பதை புரிந்துகொள்....
தமிழே ஆட்சி மொழி,தமிழனே ஆட்சியாளன்,தமிழனே குடிமக்கள்..
தமிழினத்தை பாதுகாக்க தமிழனை கொண்ட ராணுவம்.....
தமிழன் வாழும் நாட்டில் எல்லாம் தமிழர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளுக்கு உதவுவதற்கு தமிழீழ தூதரகம்...
தமிழர்களுக்கு இரட்டை குடிஉரிமை...இன்னும் பல நன்மைகள் உனக்கு(தமிழினத்திற்கு)ஏற்படபோகிறது என்பதை என்னிப்பார்...
இந்த தலைமுறையிலயே இன்னும் இதுபோன்று பலநன்மைகள் உனக்கு கிடைக்க....பிறகு வரும் உன் சந்ததிகளுக்கு கிடைக்க
தமிழீழம் அமைவதற்கு முழு ஆதரவு கொடுங்கள்.
நீங்கள் ஆதரவு கரம் மட்டும் நீட்டினால் போதும்..விரைவில் ஈழம் மலர வழி பிறக்கும்

ஒரு தமிழனா நான் இந்த பக்கத்தை புகார் செய்துவிட்டேன் நீங்க....??????



 

================================================
தமிழீழ விடுதலைப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தும்,
இந்திய அரசின் பரப்புரைப் படமான 'மெட்ராஸ் கபே' படத்தின்,
விளம்பரப் பக்கத்தை முகநூலிலிருந்து விரட்டியடிப்போம்!
================================================

தமிழர்களின் ஞாயமான விடுதலைப் போராட்டத்தை பயங்கரவாதமாக சித்தரித்து வரும் சிங்களப் பேரினவாத இலங்கை அரசும், அதற்கு முழு உதவிகளையும் செய்து வரும் தமிழர்களின் முதன்மைப் பகை சக்தியான இந்திய அரசும் இணைந்து தயாரித்துள்ள படமாக, 'மெட்ராஸ் கபே' திரைப்படம் வெளிவரவுள்ளது.

தமிழர்களை அந்நியர்களாகவே எப்போதும் கருதுகின்ற வடநாட்டவர்களும் மலையாளிகளும் இணைந்துப் பணியாற்றியுள்ள இப்படத்தை தமிழகம் மட்டுமின்றி, உலகின் எந்தப் பகுதியிலும் திரையிடக் கூடாதென தமிழ் உணர்வாளர்கள் வலியுறுத்துகின்றனர்.

இப்படத்தை, தமிழக அரசு உடனடியாகத் தடை விதிக்க வேண்டுமெனவும் கோருகிறோம்.

இப்படத்தின் முகநூல் விளம்பரப்பக்கம் கீழ்க்கண்ட இணைப்பில் செயல்படுகின்றது.

முகவரி: https://www.facebook.com/DecodeMadrasCafe

தமிழ் உணர்வாளர்கள் அப்படத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், அப்பக்கத்திற்குச் சென்று, Report Page என்ற தெரிவில் உள்ள 'Its Harassing me' என்ற வார்த்தையைக் கிளக் செய்யுமாறு அன்புடன் வேண்டிக் கேட்டுக் கொள்கிறோம்!

==================================
தலைமைச் செயலகம்
தமிழ்த்தேசப் பொதுவுடைமைக் கட்சி
==================================