Monday, 19 August 2013

இனம் முக்கியமா ?கட்சி முக்கியமா ?

தமிழர்களே உங்கள் கட்சியை விட உங்கள் இனத்திற்கு முன்னுரிமை கொடுங்கள்....இனத்திற்காக கட்சியை இழக்கலாம் ஆனால் கட்சிக்காக இனத்தை இழக்க கூடாது..இங்கு மாறி நடக்கிறது தயவுசெய்து இனி மாறிவிடுங்கள்...எதற்கு முதலில் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று சிந்தித்து உணருங்கள்.....நீங்கள் ஒரு கட்சியில் இருந்தாலும் கட்சியை விட்டு வரமுடியவில்லை என்றாலும் தயுவுசெய்து இனத்திற்கு ஆதரவான கட்சிக்கு வாக்களியுங்கள் இனி வரும் தேர்தலில்....தமிழர்களே கட்சியை விட இனம் தான் முக்கியம் என்பதை உணருங்கள்.......
 
 
தமிழ்நாட்டில் இனத்தின் எதிரிகளுக்கு ஆதரவு தரும் சில கட்சிகளில் உள்ள சில தமிழர்களே உங்களுக்கு இனத்தை விட கட்சி தான் முக்கியமா...
ஏன் இனத்தின் எதிரிகளுக்கு ஆதரவு தருகிறீர்கள்....இனத்தின் எதிரிகளுக்கு ஆதரவளிப்பது குற்றஉணர்வு தோன்றவில்லையா...தமிழின போராட்டத்தை வேறு வடிவத்திற்கு கொண்ட சென்ற தமிழர்களுகாக தங்கள் உயிரை துறந்த விடுதலைபுலிகளை ...உங்கள் கட்சிக்காக எதிர் பிரச்சாரம் செய்கிறீர்களே.....இனத்தை விட உங்கள் கட்சி தான் முக்கியமா...இனம் அழிந்தாலும் பரவா இல்லை ஆனால் உங்கள் கட்சி தான் முக்கியமா உங்களுக்கு....சிந்தித்து பாருங்கள்....தமிழீழ போரட்டத்திற்கு ஆதரவு கொடுங்கள்....உங்களுக்கு வரும் நன்மையை நீங்களே எதிர்ப்பது உங்களுக்கு நன்மையா.....தயவுசெய்து கட்சியில் உள்ள அனைவரும் உங்களுக்கு கிடைக்கும் சிறு ஆதாயத்திற்காக உங்கள் கட்சியை இனத்திற்கு எதிராக செயல்பட்டாலும் ஆதரிக்காதீர்கள்..இனத்திற்கு முதல் முக்கியத்துவம் கொடுங்கள்...இனத்திற்கு பிறகுதான் கட்சி....இது நான் எல்லா கட்சியில் உள்ளவர்களுக்கும் சொல்கிறேன்.....